Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2020 18:44:53 Hours

முல்லைத்தீவு தளபதி தனது கட்டளை பிரிவுகளின் சுகாதார முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆராய்வு

கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தேவையை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் படையினருக்கு தெளிவுபடுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை (10) ஆம் திகதி 68 ஆவது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் அதன் கட்டளை பிரிவுகளுக்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது, 68 ஆவது படைப்பிரிவு, 681 ஆவது பிரிகேட், 682 ஆவது பிரிகேட், 7 ஆவது கெமுனு ஹேவா படையணி , 18 விஜயபாகு காலாட் படை, 6 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படை மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றிக்கு விஜயம் மேற்கொண்டு அவற்றின் அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்பார்வை செய்தார்.

இந்த விஜயத்தில் 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, 681 வது பிரிகேட் தளபதி கேனல் நலின் ஹெட்டியாராச்சி, 682 வது பிரிகேட் தளபதி கேனல் சமிந்த கலப்பதி மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். Running sports | nike air force 1 shadow , eBay