Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2020 21:44:53 Hours

உலகப் போர் வீர்ர்களின் நினைவாக பொப்பி மலர் நினைவு தினம்

இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கம் ஏற்பாடு செய்த I & II உலகப் போர் வீரர்களின் நினைவு தினமான 'பொப்பி தினமான’ ஆயுதப்படைகள் நினைவு தினம் இன்று (15) காலை அனுஷ்டிக்கப்பட்டது. விகார மகா தேவி பூங்கா நினைவுத் தூபியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் , போர் வீரர்கள், சேவையிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள மற்ற அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் சார்பாக பாதுகாப்புத் தலைமைத் பிரதானியின் அலுவலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழா புனிதமான மற்றும் தாளங்களால் வண்ணமயமாக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவரும், ஆயுதப்படைகளின் நினைவு தின, பொப்பி நினைவு தலைவரும் , மற்றும் நினைவுத் தூபி மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன் கேணல் (ஓய்வு) அஜித் சியாம்பலாபிட்டிய மற்றும் சிரேஷ்ட முன்னாள் படைவீரர்கள் குறித்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த நிகழ்வு தேசிய கீதம் பாடல் மற்றும் உலகப் போர் வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. நான்கு முக்கிய பிரிவுகளின் மத அனுசரிப்புகள் அடுத்ததாக. சடங்கு உடையணிந்த படையணியினர் நினைவுத் தூபியின் மூலைகளை சுற்றி இருந்ததுடன் பங்கேற்பாளர்கள் கல்லறை வரை நடந்து முதல் 'பொப்பி' மாலை வைத்து அவர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தி, அதைப் பின்பற்றி இறந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர், அதன்பிறகு அந்த இறந்தவர்ளின் உறவினர்கள் அதனை தொடர்ந்தனர்.

அடுத்து, முப்படையினர் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப அவர்களின் நினைவகத்தை கௌரவிக்கும் முகமாக மெல்லிசை இசைத்தனர் கொவிட்-19 தொற்று சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சேவை செய்யும் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் கலந்து கொண்டனர். இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் சிரேஷ்ட படை வீரர்களும் சமூகமளித்தவர்களுக்கு பொப்பி மலரினை அணிவித்தனர்.

இன்றைய விழாவானது பொப்பி கொடிகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்ட ‘பொப்பி வாரத்திற்கு’ நிகழ்வுகளின் கடைசியாக காணப்பட்டது. ஆரம்பத்தில், முதல் பொப்பி கொடி ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. url clone | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK