Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2020 14:17:58 Hours

இலங்கை இராணுவ மருத்துவ படையிணியின் 6 வது படைகுழுவினர் தென் சூடானிலிருந்து நாடு திரும்பல்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக தென் சூடானின் (UNMISS) நிலை -2 வைத்தியசாலையில் 16 மாத கால அமைதி காக்கும் சேவையை நிறைவு செய்து கொண்ட இலங்கை இராணுவ மருத்துவ படையிணியின் 6 வது படைகுழுவினரின் முதல் கட்ட நான்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் 26 ஏனைய இராணுவ சிப்பாயினர் கொண்ட குழுவினர் , 16 ம் திகதி காலை தங்களது தாய் நாட்டை வந்தடைந்தனர். குறித்த அனைவரும் தேவையான தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்காக நேரடியாக தியதலாவை மற்றும் பசறை ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா. எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பி -767-300 விமான மூலம் இன்று (16) அதிகாலை 2.30 மணியளவில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தைத் வந்தடைந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக இரண்டு தனிமைபடுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 11 அதிகாரிகள் உட்பட 61 இராணுவ வீரர்களின் 6 ஆவது குழு 2019 ஜூலை 3 ஆம் திகதி UNMISS பணிக்கு புறப்பட்டது.

இதற்கிடையில், நாட்டுக்கு திரும்பி வந்தவர்களுக்கு பதிலாக இலங்கை மருத்துவ படையணியின் 7 ஆவது படைப் பிரிவின் முதல் குழு தென் சூடானில் உள்ள UNMISS க்கு நாளை (17) ஆம் திகதி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஆவது படையணியின் முதல் அணியில் பத்து அதிகாரிகள் மற்றும் 22 ஏனைய படையினர் உள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

குறித்த புதிய SRIMED வைத்தியசாலையானது ஆபரேஷன் தியேட்டர்கள், பிரசவ அறைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், வெளிநோயாளிகள் துறை, பல் அறுவை சிகிச்சை, மருந்தகம், மருத்துவ கடை, கதிரியக்கவியல் பிரிவு, மருத்துவம் ஆகியவற்றைக் கொண்ட இரண்டாம் நிலை மருத்துவ வசதிகளுக்கு தேவையான கூறுகளைக் கொண்ட தென் சூடானை தளமாகக் கொண்ட SRIMED நிலை 2 மருத்துவ மனை ஆய்வகம், ஈ.சி.ஜிஅறை, கருத்தடைத் துறை, உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவு, மருத்துவ கழிவுகளை அகற்றும் பிரிவு, உறை விப்பான் சவக் கிடங்கு, தனிமைப்படுத்தும் களம் மற்றும் பிற களங்கள், ஆம்புலேட்டரி புத்துயிர் மற்றும் காற்றோட்டம் திறன்களைக் கொண்ட ஏரோ மருத்துவ வெளியேற்ற வசதி ஆகிய வசதிகளை கொண்ட வைத்தியசாலையாகும். Running sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%