11th November 2020 10:04:23 Hours
திங்கள்கிழமை (9) காலமான பிரிகேடியர் (ஓய்வு) பிரக்னரத்ன பண்டார (84) அவர்களின் இராணுவ இறுதி மரியாதை இன்று (11) பிற்பகல் பிலியந்தல மயானத்தில் அவரது உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க உள்ளிட்ட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள்,கெமுனு ஹேவா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்திய இறுதி ஊர்வலம் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப படையினரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதை பேழைத் தாங்கும் வண்டியில் வைப்பதற்கு முன்னர் வழங்கப்பட்டதுடன் ஆரம்பமானது.
பின்னர் மயானத்தில் இடம் பெற்ற இறுதி சடங்கு பங்கேற்றவர்களுக்காக இராணுவத் தளபதி சார்பாக இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேனா வடுகே அவர்களால் சிறப்பு பகுதி I ஆணையிடுதல் வெளியிடப்பட்டது. மறைந்த பிரிகேடியர் பெற்றுக்கொண்ட பதகங்கள் அவரின் உறவினருக்கு வழங்கப்படுவதற்கு முன்பு ஒரு சிரேஷ்ட அதிகாரியால் பொது மக்கள் மத்தியில் வாசிக்கப்பட்டது.
இருள் சூழ்ந்த வேளையில் எட்டு பேர் கொண்ட இராணுவக் குழுவினர்களால் தேசியக் கொடி போர்த்தப்பட்ட பூதஉலை எடுத்து செல்லும் போது சோக பாடலகள் இசைக்கப்பட்டன. பின்னர் 11 துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இறந்த இராணுவ அதிகாரியின் இறுதி பியுகல் ஊதப்பட்டு உயர்ந்த அஞ்சலியுடன் நித்திய இராணுவ ஓய்வைக் குறிக்கும் நிகழ்வு நிறைவு பெற்றது.
இறுதிச் சடங்கின் போது வாசிக்கப்பட்ட சிறப்பு பகுதி I ஆணையிடல் பின்வருமாறு;
trace affiliate link | Releases Nike Shoes