15th November 2020 09:00:48 Hours
குருநாகல் போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியின் படையணி நிதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்து விளையாட்டரங்கம் விஜயபாகு காலாட் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களால் சனிக்கிழமை (7) திறந்துவைக்கப்பட்டது.
பகல் மற்றும் இரவு நேரங்களில் விளையாட்க்கூடிய ஒளி வசதிகளுடன் கூடிய உயர் தரங்களுக்கு ஏற்ப படையினரின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட படையணியின் நீண்டகால விளையாட்டுத் தேவையாக இருந்தது. புதிய கரப்பந்து மைதானத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் 1999 இல் உருவாக்கப்பட்ட படையணியின் கரப்பந்து குழு அணி மற்றும் படையணியின் கரப்பந்து அணி ஆகிய இரு அணிகளுக்கு இடையில் கண்காட்சி கரப்பந்து போட்டி நடைபெற்றது.
விஜயபாகு காலாட் படையணியின் கரப்பந்தாட்ட அணி 2011, 2016 இல் ‘ஏ’ பிரிவில் இராணுவ சம்பியன்களாகவும், 2003 ல் ‘பி’ பிரிவில் சம்பியனாகவும் உருவெடுத்தது. 2008 ஆம் ஆண்டில் 'ஏ' பிரிவில் இரண்டாம் இடத்தையும், 2001 ல் 'பி' பிரிவு, 2018 இல் சூப்பர் லீக் மற்றும் 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர். இன்று விஜயபாகு காலாட் படையணியின் 6 வீரர்கள் அற்புதமான சாதனைகள் காரணமாக இராணுவ கரப்பந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது விஜயபாகு காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர். spy offers | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth