12th November 2020 21:30:21 Hours
இலங்கை இராணுவ படைக் கலச் சிறப்பணியில் மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு அவருக்கு ரொக் ஹவுஸில் அமைந்துள்ள இலங்கை இராணுவ படைக் கலச் சிறப்பணி தலைமையகத்தில் வைத்து 09 ஆம் திகதி திங்கட்கிழமை கௌரவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
இவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயிற் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து ரொக் ஹவுஸ் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா,படைக் கலச் சிறப்பணியின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தாரக ரத்னசேகர, மற்றும் படைக் கலச் சிறப்பணியின் மத்திய படைத் தளபதி பிரிகேடியர் சுமித் தேவப்பிரிய உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளால் அவர் வரவேற்கப்பட்டார். அன்றைய நிகழ்வில் மரக்கன்று நடவு செய்தல், அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரம், மற்றும், படையினருக்கு உரையாற்றுதல் மற்றும் இராணுவ சம்பிரதாய முறைப்படி வீதிகளில் இரு பக்கமும் நின்று படையினரால் பிரியா விடை மரியாதை வழங்கப்பட்டன.
முறையான பிரியாவிடையின் பின்னர் , அதே மாலை மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன மற்றும் திருமதி புமாலி திலகரத்ன ஆகியோருக்கு இலங்கை படைக்கலச் சிறப்பணியின் அதிகாரிகளால் அதிகாரிகள் உணவக அறையில் இரவு விருந்துபசாரம் வழங்கப்பட்டது. Sports News | Sneakers