14th November 2020 09:00:05 Hours
இராணுவத் தளபதியின் முன்முயற்சியான 'துரு மிதுரு-நவ ரட்டக்' எண்ணக்கருவின் கீழ் ,மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் வெள்ளிக்கிழமை (13) இராணுவ முகாம் மற்றும் பன்னலுவை, துந்தனவிலில் உள்ள பண்ணை உள்ளிட்ட 6 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொண்டது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பாரம்பரிய வேளாண் நடைமுறைகளுக்கு ஏற்ப விதை நெல் விதைக்கும் செயல்முறைஇடம்பெற்றது ‘கமத’ '(கதிரடிக்கும் தளம்).
நெல் விதைப்பு விழாவில் மேற்கு பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க, மேற்கு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன, மேற்கு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை அதிகாரி கேணல் அனுஜ பாலசூரிய,திட்ட அதிகாரி கேணல் துஷான் கனேபொல, சிரேஷ்ட அதிகாரிகள், 1வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் 1வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மற்றும் பன்னலுவை இராணுவ முகாமின் ஏனைய படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Authentic Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos