12th November 2020 21:33:01 Hours
நாட்டை கட்டியெழுப்புவதன் முன்நோக்கமாக கொண்டு, 222 ஆவது பிரிகேட் தளபதியின் மேற் பார்வையில், நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த பத்து ஏக்கர் வயல் நிலத்தில் கந்தளாய் சேறுவில பிரதேசத்தில் அமைந்துள்ள 22 ஆவது விஜயபாகு காலாட்படையணியின் படையினர்களால் கடந்த புதன் கிழமை (11) நெல் பயிர் செய்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த திட்டமானது 22 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 222 வது பிரிகேட் தளபதி கேனல் விராஜ் விமலசேன அவர்களின் மேற்பார்வையில், படையினரால் சேருவவில ரஜ மகா விகாரைக்கு சொந்தமான 10 ஏக்கர் சதுப்பு நிலத்தை விகாராதிபதியின் வேண்டுகோளிற்கமைய பயிர் செய்வதற்காக உழுது தயார்படுத்தினர்.
குறித்த திட்டமானது இராணுவ தளபதியின்'துரு மிதுரு - நவ ரட்டக்' எனும் திட்டத்திற்கமைய லெப்டினன் கேணல் எஸ்.ராமநாயக்க தலைமையில் 22 ஆவது விஜயபாகு காலாட் படையின் பட்டாலியன் படையினரால்'தேசத்தைக் கட்டியமைக்கும்' பணிகளில் ஒன்றாக இது மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நெற் பயிர்செய்கை நிகழ்வானது சமய சம்பிரதாய முறைப்படி அதிகாலையில் இடம்பெற்றதுடன் அதில் சேருவவில விகாரையின் தலைவரும் மற்றும் அப்பகுதியில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பயிர் செய்கை நிகழ்வில் பிரதம அதிதியான 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களுடன் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு வருகை தந்த பிரதம அதிதியை 222 வது பிரிகேட் தளபதி மற்றும் 22 ஆவது விஜயபாகு காலாட்படையணியின் பட்டாளியன் கட்டளை அதிகாரி ஆகியோர் இணைந்து வரவேற்றனர். Sports News | Sneakers Nike