Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2020 14:03:04 Hours

வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி வவுனியாவிலுள்ள பௌத்த பிக்குகளை சந்திப்பு

அன்மையில் வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், வியாழக்கிழமை (05) வவுனியா பகுதியில் உள்ள முக்கிய பௌத்த விகாரைகளுக்கு சென்று அங்குள்ள தலைமை பௌத்த பிக்குகளை சந்தித்தார்.

அவர் மதுகந்தயில் உள்ள ஸ்ரீ போதிதக்ஷினாராம விகாரை, ஸ்ரீ தலதா விகாரை, எட்டம்பகஸ்கடயில் உள்ள ஸ்ரீ சுதர்ஷனராம விகாரகைளுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றார். அங்கு அவர் சகவாழ்வு, மத நல்லிணக்கம் மற்றும் கொவிட்-19 தொற்று நோயிலிருந்து தடுப்பது போன்ற விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த விஜயத்தின் போது வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக மற்றும் 56ஆவது படைப் பிரிவின் சில சிரேஷ்ட அதிகாரிகள் தளபதியுடன் இணைந்திருந்தனர். latest jordan Sneakers | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD