Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2020 08:30:26 Hours

512 வது பிரிகேட் படையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற வருடாந்த ‘கட்டின’ நிகழ்வு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 52 வது படைப் பிரிவின் 512 வது பிரிகேட் படை படையினர் சனிக்கிழமை (7) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (8) யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீ நாக விகாரையின் வருடாந்திர ‘கட்டின பூஜை’ விழாவை நடத்துவதற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.

விஹாரதிபதி மீகஹஜந்தூர் சிரிவிமல தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 512 படைப்பிரிவு தலைமையகத்திலிருந்து வண்ணமயமான‘கட்டின சீவரய’ ஊர்வலம் நடைபெற்றது. தம்ம பிரசங்கம் மற்றும் ‘பூஜையினைத் தொடர்ந்து அதிகாலையில் அன்னதானம் வழங்குதல் மற்றும் அனைத்து பிக்குகளுக்கும் அடபிரிகர பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மகா சங்க உறுப்பினர்களுக்கு 'சீவரய' வழங்கி, மத சடங்குகளில் மத பிரமுகர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. கே. மகேசன், (வடக்கு) ) முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி , 51 மற்றும் 52 படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் வடக்கு மாகாணத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. சஞ்சீவ தர்மரத்ன,511 மற்றும் 512 பிரிகேட் படைப்பிரிவுகளின் தளபதிகள், யாழ் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டார்.

இராணுவ தலைமையகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி குறித்த ஏற்பாடு இடம்பெற்றது. Best Sneakers | Nike SB