06th November 2020 09:07:50 Hours
இலங்கை இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் யக்கல ரணவிரு ஆடைத் தொழிற்சாலையின் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருண அவர்களுக்கான பிரியா விடை நிகழ்வானது குருவிட்டயிலுள்ள கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதம அதியவர்களை மத்திய தளபது பிரிகேடியர் ரொஷான் ஜயமண்ண அவர்கள் வரவேற்று, நுழைவாயிலில் அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டதோடு , இராணுவ சம்பிரதாய முறையின் படி இராணுவ அணிவகுப்பு மரயாதையும் இடம்பெற்றது. பின்னர், உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு அவர் மலர் மாலை அஞ்சலி செலுத்தினார்.மேலும் படை வளாகத்தில் அவரினால் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
படைத் தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகளும் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினரும் கெமுனு ஹேவா படையணிக்காக அவரினால் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்காக அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவருக்கு ஆரோக்கியமான அமைதியான மற்றும் வளமான வாழ்க்கைக்காக வாழ்த்தினர்.
அன்றைய பிரதம அதிதியவர்கள் அதிகாரி உணவு அறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க அவர்கள் தனது பிரியாவிடை உரையில், கெமுனு ஹேவா படையணியின் அனைத்து அதிகாரிகள் சார்பிலும் மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருண அவர்களுக்கு தனது ஆழ்ந்த நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்தார்.
படைத் தலைமையகத்திற்கு அவரினால் மேற்கொண்ட அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டும் வகையில் மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருண அவர்களுக்கு கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியினால் சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. Nike air jordan Sneakers | Archives des Sneakers