Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2020 10:03:28 Hours

'சந்தஹிரு சேய ஸ்தூபத்தில் புது மெதுர நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நாட்டல்

புனித அனுராதபுரத்தில் இப்போது நிறைவடைந்து வரும் 'சந்தஹிரு சேய ஸ்தூபம் (பகோடா) வளாகத்தில் புதிய சன்னதி (புது மெதுர) கட்டுமானப் பணிகள் திங்கள்கிழமை (9) ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது பௌத்த பிக்குகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களின் சார்பில் வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேர அவர்கள் கட்டுமானத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். குறித்த கட்டுமான பணிக்கான அனுசரனையானது நா உயன அரன்ய சேனாசன அகுல்கமுவ ஆரியானந்த தேரர் அவர்களினால் வழங்கப்பட்டது.

தற்பேதைய ஜனாதிபதி 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளராக பதவியை வகித்தபோது அவரின் ஆலோசனையின் பேரில், பயங்கரவாதத்தை தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்பில் வென்ற அனைத்து போர்வீரர்களின் பல தியாகங்களுக்கான நினைவுச்சின்னமாக .‘சந்தஹிரு சேய’ ஸ்தூபம் காணப்படுகிறது.

21 வது பாதுகாப்பு பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 212வது பிரிகேட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ், 9வது (தொண்) பொறியாளர் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் மொகான் குமாரெ, அதிகாரிகள் மற்றும் ஆணை பெறாத அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.Sports News | Women's Sneakers