Header

Sri Lanka Army

Defender of the Nation

12th November 2020 21:28:25 Hours

542 ஆவது பிரிகேட் படையினரால் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 54 ஆவது படைப் பிரிவின் 15 வது (தொண்) கெமுனு ஹேவா மற்றும் 542 படைப்பிரிவின் படையினர், 2020 நவம்பர் 11 ஆம் திகதி குஞ்சி குல வீதித்தடையில் பொலிசாருடன் இணைந்து 2 சந்தேக நபர்களை 5.7 கிலோ கேரள கஞ்சாவுடன் காரில் வைத்து கைது செய்தனர்.

கஞ்சா மற்றும் வாகனத்துடன் வந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக மது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க, நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய போக்குவரத்து போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக பொலிசாருக்கு உதவுமாறும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். Asics footwear | New Balance 991 Footwear