13th November 2020 09:00:19 Hours
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 373 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 04 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் ஏனைய 369 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர். குறித்த தொற்றாளர்களில் 271 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 46 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் 12 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர் என கொவிட்-19 பரவலை தடப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (13) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 12226 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை கொத்தணியில் 3106 பேரும் மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் 9120 பேரும் உள்ளடங்குவர்.
அதன் பிரகாரம், 12 ஆம் திகதி வரையான மொத்த தொற்றாளர்களின் என்னிக்கை 15722, அதில் பூரண சுகமடைந்த 10652 பேர் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஏனைய 5022 பேர் தற்பொழுதும் வைத்தியசாலைகளிலும் சுக பராமரிப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகிக்னறனர் உள்ளனர்.
முழுமையாக சுகமடைந்த 470 பேர் வைத்தியசாலைகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்திற்குள் இன்று காலை (13) காலை 0600 மணியளவில் வெளியேறியுள்ளனர்.
இதுவரை கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆகும். மேலும் கடந்த 24 மணிநேரத்திற்குள் 2 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் கொழும்பு 12 மற்றும் மீகொடை சேர்ந்தவர்களாவர்.
இன்று 13 ஆம் திகதி வரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுடன் முதல் மற்றும் இரண்டாவது தொடர்பு கொண்ட நபர்கள் மொத்தமாக 30000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இன்று (13) காலை ஜப்பானில் இருந்து UL455 விமானம் ஊடாக 16 பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை (13) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 30 தனிமைப்படுத்தல் மையங்களில் 2845 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 12 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10,111 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 637122 ஆகும். (முடிவு) Sportswear free shipping | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf