Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2020 10:00:31 Hours

மினுஸ்மா இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு பாராட்டு

லெப்டினன் கேணல் ஸ்ரீநாத் கால்லகே அவர்களின் தலைமையில் மாலியில் (மினுஸ்மா) உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இன் கீழ் நிலைநிறுத்தப்பட்ட இலங்கை அமைதி காக்கும் படை குழுவினர் மாலியில் உள்ள மினுஸ்மா படைத் தளபதி, பிற உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் உத்தியோகத்தர்கள் ஆகியோரினால் அவர்களின் அனைத்து உயர் தொழில்முறை மற்றும் ஒழுக்கத்திற்காக பாராட்டப்பட்டனர்.

இலங்கை அமைதிகாக்கும் படையினர் 2020 ஒக்டோபர் 13 வரை 10 இற்கு மேம்பட்ட வெடிக்கும் சாதனங்களை (IED) இராணுவத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அல்லது மினுஸ்மா உபகரணங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்டு 14 போர் அமைதிகாக்கும் நடவடிக்கைகளை திறம்பட நிகழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை போர் அமைதிகாக்கும் படைக் குழு 2019 நவம்பர் 13 அன்று 20 அதிகாரிகள் மற்றும் 223 ஏனைய சிப்பாய்களுடன் கடமைகளை தனது ஏற்றுக்கொண்டது, மேலும் இன்றுவரை அதன் நடவடிக்கைகளை செய்து வருகிறது.

பழங்குடி போராளிகளால் காவ் நகரத்திலிருந்து மேனக நகரம் (05 ஐ.இ.டி) மற்றும் காவ் முதல் மொப்தி நகரம் (05 ஐ.இ.டி) வரை சாலையில் புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை இலங்கை படையினர் மீட்டு மிக முக்கியமான நபர்கள் , நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் ஆகியோரின் உயிர்களை காப்பாற்றினர்.சில கன்னிவெடிகள் சில ரிமோட் கட்டுப்பாட்டு இயக்கியினால் இயக்க்க்கூடியவை மற்றும் அவை வெடித்தால் பெரியளவிலான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

சில உயர்மட்ட ஐ.நா. அதிகாரிகள் மற்றும் மினுஸ்மா படைத் தளபதி ஆகியோர் இலங்கை காம்பாட் கொன்வாய் படை முகாமுக்குச் சென்று தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, மாலியில் அவர்களினால் ஆற்றப்பட்ட சிறந்த கடமைகளுக்காக அவர்களுக்கு பாராட்டினையும் தெரிவித்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு, உறுதிப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நல்லிணக்க செயல்முறைக்கு ஆதரவளிப்பதற்கும், மாலியில் அரச அதிகாரிகளை மீண்டும் ஸ்தாபிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை படையினருக்கு அழைப்பு விடுத்தது. 1 வது இலங்கை போர் அமைதிகாக்கும் படைக் குழு 2017 டிசம்பரில் மினுஸ்மாவில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2019 நவம்பர் 13 ஆம் திகதி தற்போதைய இலங்கை போர் அமைதிகாக்கும் படைக் குழு செயற்படத் தொடங்கியது.

மாலியில் உள்ள உள்நாட்டு மோதல்கள் மாலியில் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை தொடர்ந்து அச்சுறுத்துகின்றன, மேலும் ஃபுலானி மற்றும் டோகோன் பழங்குடி சமூகங்களுக்கிடையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்த பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை நாட்டிற்கு அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.Sports brands | Yeezy Boost 350 Trainers