11th November 2020 10:05:28 Hours
கொவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதனை முன்னிட்டு, கெளரவ பிரதமரும் புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சருமான கொளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அலுவலகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைவாக நாடு முழுவதும் ‘ரத்தன சூத்ர’ கோஷமிடுதல் திட்டத்திற்கு இணையாக 'ரத்தன சூத்ர' என்ற தெய்வீக கோஷமானது ஞாயிற்றுக்கிழமை (8) கிளிநொச்சி லும்பினி கோயிலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் வழிகாட்டலின் கீழ் 57வது படைப் பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாபா அவர்களின் மேற்பார்வையில் இது ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளைத் தளபதியவர்கள் மகா சங்கத்திற்கு பாரம்பரியமாக வெற்றிலைத் தட்டுகளை அடையாளமாக வழங்கி அவர்களுக்கு பிரித் கோஷத்தை தொடங்க அழைப்பு விடுத்தார்.
மாங்குளம் ஸ்ரீ சுகத விகாரையின் தலைமை தேரர் வென் ஹிங்குரகந்த சுமன தேரர் மற்றும் மகா சங்கத்தின் பல உறுப்பினர்கள் ஒரு ‘அனுஷாசன’வுக்குப் பிறகு கோஷத்தைத் தொடங்கினர். 65 மற்றும் 66 வது காலாட்படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, பிரிகேட் படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த மத நிகழ்வில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து பங்கேற்றனர்.
இதற்கிடையில், முல்லைத்தீவு பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 59 வது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவ மற்றும் 593 வது பிரிகேட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் வசந்த பாலம்கும்புர ஆகியோரின் மேற்பார்வையில் படையினர் அதே நாள் 8 ஆம் திகதி கோகிலாய் ஸ்ரீ சம்போதி விகாரையில் பிரித் சென்டிங் நிகழ்வை நடாத்த தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர். முல்லைத்தீவு பாதுகாப்பு கட்டளைத் தளபதியவர்கள் மகா சங்கத்திற்கு பாரம்பரியமாக வெற்றிலைத் தட்டுகளை அடையாளமாக வழங்கி அவர்களுக்கு பிரித் கோஷத்தை தொடங்க அழைப்பு விடுத்தார்.
கெளரவ பிரதமரும் புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சருமான கொளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைவாக நாடு முழுவதும் ‘ரத்தன சூத்ர’ கோஷமிடுதல் நிகழ்வானது இடம்பெற்றன. கோகிலாய் ஸ்ரீ சம்போதி தலைமை தேரர், மகா சங்கத்தின் பல உறுப்பினர்களும் குறித்த பிரித் சென்டிங் நிகழ்வில் இணைந்திருந்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு கட்டளைத் தளபதி, 59 வது படைப் பிரிவின் படைத் தளபதி, 593 வது பிரிகேட் படைப் பிரிவுத் தளபதி, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த மத நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து பங்கேற்றனர்.
இதேபோல், வன்னி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர் மன்னாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மாதோட்ட ரஜமகா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி ரத்தன சூத்ர கோஷ நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். கோவிட் -19 தொற்று நோயில் இருந்து மீள நாட்டிற்கு ஆசீர்வாதம் அளிக்கும் குறித்த நிகழ்வில் 54 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார அவர்கள் கலந்து கொண்டார்.
ஆரம்ப நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படை தலைமையக கட்டளைத் தளபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 541, 542, 543 மற்றும் 544 வது பிரிகேட் படைப்பிரிவுகளின் தளபதிகள், 54 வது படைப் பிரிவு தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள பட்டாலியன்களின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் குறித்த நிகழ்வில் பங்கேற்றனர். Nike air jordan Sneakers | Klær Nike