Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2020 06:42:26 Hours

மட்டக்களப்பில் முதல் கொவிட்-19 செயல்பாட்டு மையம் நிறுவல்

கொவிட் -19 தொடர்பான எந்தவொரு தற்செயலையும் எதிர்கொள்ளும் முகமாக, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப் பிரிவின் 231 வது பிரிகேட் படையின் ஒத்துழைப்போடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் COVID-19 செயல்பாட்டு மையமானது திங்கள் (9) முதல் செயற்படும் வண்ணம் நிறுவப்பட்டது.

மட்டக்களப்பில் உள்ள இந்த கொவிட்-19 24 மணிநேர செயல்பாட்டு மையத்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் , மாவட்ட செயலாளரின் பிரதிநிதிகள், பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக அதிகாரிகள், 231 படைப்பிரிவு தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் மற்றும் ஏனைய பொறுப்புடைய நிறுவனங்கள் ஆகியோரினால் நிர்வகிக்கின்றது. குறித்தசெயல்பாட்டுத் திட்டமானது 23 வது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 231 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் ஆதரவில் இடம்பெறுகிறது.

படையினரின் ஒத்துழைப்போடு ஸ்தாபிக்கப்பட்ட குறித்த செயல்பாட்டு மையம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர், போதனா வைத்திசாலை பணிப்பாளர் மற்றும் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றலில் (09) திங்களன்று 1030 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. Asics shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ