Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2020 09:30:23 Hours

மேஜர் ஜெனரல் ஆர்டபிள்யூ கிங்ஸ்லி ரணவன(ஓய்வு) அவர்களின் இறுதிச் சடங்கு

மறைந்த மேஜர் ஜெனரல் ஆர்.டபிள்யூ. கிங்ஸ்லி ரணவன அவரது இறுதி சடங்கு நிகழ்வானது அவரது கடந்தகால இராணுவ தோழர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு மத்தியில், புதன்கிழமை (10) மாலை கேகாலை கல்லறையில் இடம்பெற்றது. அவர் தனது 84 வயதில் திங்கள்கிழமை (8) ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதி ஊர்வலத்தில் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேன வடுகே, இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாரத சமரகோன், இலங்கை சிங்க படையணியின் மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக்க மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினருடன் அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர். இலங்கை இராணுவக் குழு பாடல்களைப் பாடத் தொடங்கியபோது, எட்டு பேர் கொண்ட இராணுவக் குழுவினர் தேசியக் கொடியில் போர்த்தப்பட்ட கலசத்தை எடுத்துச் சென்றனர்.

பின்னர் கல்லறையில் நடந்த இறுதி சடங்கு விழாவில் பங்கேற்றவர்கள், இராணுவத் தளபதி சார்பாக இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேன வடுகே வழங்கிய சிறப்பு பகுதி I ஆணைக்கு செவிமடுத்தனர்.

இலங்கை சிங்க படையணியின் ஒரு அதிகாரியால் சிறப்பு பகுதி I ஆணை வாசிக்கப்பட்டது, படையினர் தங்களது மறைந்த மேஜர் ஜெனரலை அடையாளமாக ஒரு இராணுவ அதிகாரி பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலியான 13 துப்பாக்கி வணக்கம் சூட்டின் மூலம் வணக்கம் செலுத்தினர், சில நிமிடங்களுக்குப் பிறகு, பெருமைக்குரிய இராணுவ வீரர் பூதவுடல் அன்புக்குரிய உறவினர் மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் மத்தியில் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இராணுவத் தளபதியால் வழங்கப்பட்ட சிறப்பு பகுதி I ஆணை இறுதிச் சடங்கின் வாசிப்பு பின்வருமாறு; Best Authentic Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp