11th November 2020 10:00:28 Hours
இன்று (11) காலை வரையான அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 430 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளனர் என் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (11) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,237 பேர் ஆகும். அவர்களில் 1,041 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், 1,007 பேலியகொடை மீன் சந்தை கொத்தணியை சார்ந்தவர்கள் ஏனைய 9,189 மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
நேற்று (10) இரவு துபாயில் இருந்து EK 648 விமானம் ஊடாக 50 பயணிகளும், இன்று (11) காலை எத்தியோப்பியாவில் இருந்து ET 8804 விமானம் ஊடாக 110 பயணிகளும், துபாயில் இருந்து UL 226 விமானம் ஊடாக 270 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அத்தோடு UL 1024 விமானம் ஊடாக 66 பயணிகள் இந்தியா மும்பாயில் இருந்து வரவுள்ளனர். அவர்கள் அனைவரையும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப்ப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 08 நபர்கள் இன்று (11) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், திக்வெல்லை ரிசோர்ட் தனிமைப்படுத்தல் மையம் 01, ஹோட்டல் வின்ட் பீச் தனிமைப்படுத்தல் மையம் 02, கற்பிட்டி ருவல்ல தனிமைப்படுத்தல் மையம் 05 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று காலை வரை மொத்தம் 64,263 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (11) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களில் 2,277 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 10 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 8,272 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 619,108 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 657 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (11) 0600 மணியளவில் வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலுருந்து வந்தவர் ஏனைய அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளனவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. (முடிவு) Sportswear Design | adidas poccnr jumper dress pants size