Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2020 10:00:48 Hours

காயமடைந்த போர் வீரர்களுக்கு செயற்கை கால்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி

காயமடைந்த போர் வீரர்களை செயற்கை கால்களை தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாக பயிற்றுவிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சியானது ராகமையிலுள்ள ரணவீரு செவன செயற்கை தயாரிப்பு பட்டறையில் ஜூலை 20 முதல் நவம்பர் 02 வரை நடைபெற்றது.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காயமடைந்த பல்வேறு படைப்பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பேர் உள்ளடங்கிய போர் வீரர்களின் குழு இந்த பயிற்சிக்கு உட்பட்டது, இது பெரும்பாலும் சிவில் துறை வல்லுநர்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்களால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவு விழா வியாழக்கிழமை (5) புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபேசேகர அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

ராகமை ரண விரு செவனயின் தளபதி பிரிகேடியர் துஷான் சேனரத்ன, ராகமை ரண விரு செவனயின் பிரதித் தளபதி கேணல் பந்துல பண்டார, புனர்வாழ்வு மற்றும் ஹெமாட்டாலஜிஸ்ட் டொக்டர் லிலானி பனங்கல, சில அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த பயிற்சியில் 10 வது கெமுனு ஹோவா படையணியைச் சேர்ந்த ஆர்.டி.எச்.குமார அவர்கள் சிறந்த மாணவராக பரிந்துரைக்கப்பட்டார். affiliate tracking url | Women's Designer Sneakers - Luxury Shopping