10th November 2020 11:05:28 Hours
இன்று (10) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணி நேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 356 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (10) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,807 பேர் ஆகும். அவர்களில் 1,041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், 1,007 பேலியகொடை மீன் சந்தை கொத்தணியை சார்ந்தவர்கள் ஏனைய 8759 மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தையில் தொற்றுக்குள்ளான கொத்தணியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (10) காலை துபாயில் இருந்து EY 264 விமானம் ஊடாக 16 பயணிகளும், டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 12 பயணிகளும், டோகா கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 06 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 38 நபர்கள் இன்று (10) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், சிட்ரஸ் வஸ்கடுவை தனிமைப்படுத்தல் மையம் 01, ஹோட்டல் புளூ வோட்டர்ஸ் தனிமைப்படுத்தல் மையம் 02, கடற்படை புவனேக தனிமைப்படுத்தல் மையம் 35 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று வரை மொத்தம் 64075 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (10) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 27 தனிமைப்படுத்தல் மையங்களில் 2362 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 09 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 7986 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 610836 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 595 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (10) 0600 மணியளவில் வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்கள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. (முடிவு) latest jordan Sneakers | 『アディダス』に分類された記事一覧