Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2020 06:53:43 Hours

டயலொக் நிறுவனத்தினால் நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இலவச தொலைபேசி அலைவரிசை

நாட்டின் ஆபத்தான கொவிட் 19 தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்தின் தங்களின் வகிபங்கை வழங்கும் வகையில் டயலொக் ஆக்ஸியடா கம்பெனி லிமிடெட் அதன் அலைவரிசை வசதியினை நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

டயலொக் ஆக்சியடாவின் அதிகாரிகள் மற்றும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (6) பிற்பகல் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர். தேசிய நெருக்கடியின் போது அவர்களின் வகிபாங்கை பாராட்டும் வகையில் இத்திட்டத்தை ஓரிரு நாட்களில் தொடங்குவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்தனர். இந்த வசதியானது விரைவான தகவல்தொடர்பு மூலம் அவர்களின் அவசர தேவைகளை பெரிதும் துரிதப்படுத்தும் அத்தோடு அவர்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்த உதவும். பெரும்பாலான தூரப் பிரதேசங்களில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இலவச தொடர்பாடல் வசதி கிடைக்கும் பட்சத்தில் நியாயமான முறையில் கடமைகளைச் செய்யும் போது பரவலாக பலர் பயனடைவார்கள்.

நாட்டின் இக்கட்டான இச்சந்தர்பத்தில் நிறுவனத்தின் சமூக சிந்தனை மற்றும் தாராள மனப்பான்மைக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மக்களின் நலனுக்காக இரவு பகல் பாராது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குறிப்பாக நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சேவை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆக்ஸியட்டாவின் பொது முகாமையாளர் திரு ரோஷன் சில்வா, நிதி முகாமையாளர் திரு பாலித ரத்னசேன, சிரேஸ்ட பிராந்திய முகாமையாளர் திரு சுமேத ஹேரத், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் திரு உபுல் ரோஹன மற்றும் சங்க அதிகாரி ஒருவரும் இராணுவத் தளபதி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கு கொண்டனர். Authentic Nike Sneakers | Yeezy Boost 350 Trainers