Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2020 10:00:48 Hours

மற்றுமொரு தேவையுடைய குடும்பத்திற்கு 212 வது பிரிகேட்டின் வீடு

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 212வது பிரிகேட் படையினர் தங்களின் சமூக நலத் திட்டத்தின் மற்றொரு படியாக வீடற்றவர்களுக்கு வீடமைக்கும் பணியில் தந்திரமலை துப்பிட்டியாவ பகுதியல் புதிய வீடு கட்டுவதற்கான அடிக்கல்லினை திங்கட்கிழமை (02) நாட்டினர்.

திரு பி பி சுகத் லால் பிரேமசிறி மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடன் வசிப்பதற்கு அடிப்படை தங்குமிடம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமையை கருத்திற் கொண்டு 212 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் தமது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ஆஸ்திரேலியாவை சார்ந்த நன்கொடையாளிகளான திருமதி பூர்ணா மற்றும் திரு ஹேமந்த விஜேவர்தன ஆகியோரிடம் இதன் கட்டுமான பணிக்கான அனுசரனையைபெற்றுக் கொண்டார்.

சுப நேரத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக 212 பிரிகேட்டின் தளபதி கலந்துக் கொண்டார். 21 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் ஆசீர்வாத்த்தில் 212 பிரிகேட்டின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் 5 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினரால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

212வது பிரிகேட்டின் சிரேஸ்ட அதிகாரிகள், 5வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.வி.பெர்னாண்டோ, பயனாளி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில கிராமவாசிகள் நிகழ்வில் பங்கேற்றனர். Sportswear free shipping | Sneakers