Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2020 09:45:48 Hours

58 வது படைப்பிரிவு நன்கொடையாளரின் ஒத்துழைப்பில் தேவையுடையோருக்கு ஆடைகள் பகிர்ந்தளிப்பு

58வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவின் தனிப்பட்ட முறையில் தெரிந்த தனியார் நன்கொடையாளரின் தாராள மனப்பான்மையின் ஊடாக படையினர் அண்மையில் புத்தளம் பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்கள் மற்றும் மத ஸ்தானங்களிடையே ஏராளமான ஆடைகள் மற்றும் துணிகளை பகிர்ந்தளித்தனர்.

சாரங்கள், சாரிகள், தைத்த ஆடைகள், சேட்கள், பாவாடைகள் போன்றவையும் அப்பகுதியில் உள்ள அரசு ஊழியர்களின் பயன்பாட்டிற்கான வெள்ளை அலுவலக உடைகளும் அவற்றில் உள்ளடங்கியிருந்தன.

அவற்றைப் பெற்றவர்களில் மகாகோன்வெவ சித்த சமாதி பாரமிதா விகாரையின் தலைமை தேர்ர் கருவலகஸ்வெவ கத்தோலிக்க தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய பிதா, புத்தள பிரதேச செயலகம் மற்றும் நகர சபை ஆகியோரும் அடங்குவர்.

143வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஜித் லியனகே அந்த பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு ஆடைகளை பகிர்ந்தளிக்கு நிகழ்வில் பங்கு கொண்டார். url clone | adidas