08th November 2020 09:15:48 Hours
142வது பிரிகேட்டின் 37 வது தளபதியாக பிரிகேடியர் நிலாந்த பெர்னாண்டோ திங்கள்கிழமை (2) கொஹுவலை தலைமையகத்தில் மத அனுஸடானங்களுக்கு மத்தியில் கடமை ஏற்றுக்கொண்டார்.
பிரிகேட் பதவிநிலை அதிகாரிகளினால் புதிய தளபதிளை வரவேற்றதன் பின்னர் 14வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் படையினரால் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ தனது பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்டார்.
பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ இந்த புதிய நியமனத்திற்கு முன்பு ஏர் மொபில் பிரிகேட்டின் தளபதியாக பணியாற்றினார்.
நிகழ்வில் அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து, அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை என்பவற்றுடன் நிறைவு பெற்றது.. இந்நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவு பணுயானர்கள் கலந்து கொண்டனர்.
பிரிகேடியர் உபாலி குணசேகர கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு பிரிகேடியர் பொதுப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். jordan Sneakers | Jordan Shoes Sale UK