08th November 2020 09:30:48 Hours
இலங்கை கவசப் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப் தில்லேகேரத்ன ஓய்வுபெற்ற தினத்தன்று (வியாழக்கிழமை 05ம் திகதி) ரொக் ஹவுங் இலங்கை கவசப் படை முகாம் நுழைவாயிலில் நிறுவப்பட்ட டி -55 யுத்த தாங்கி மாதிரியை (MBT of the Sri Lanka Armoured Corps) திறந்து வைத்தார்.
இது கவசப் படையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகும், மேலும் இந்நிகழ்வானது கொவிட் 19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.
மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, பிரிகேடியர் அத்துல அரியரத்ன, கவச பிரிகேட் தளபதி பிரிகேடியர் தாரக ரத்னசேகர , நிலையத் தளபதி பிரிகேடியர் சுமித் தேவப்பிரிய , சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் கலந்துக்கொண்டனர். Sneakers Store | Nike Shoes