08th November 2020 10:15:48 Hours
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவு படையினர் புதிதாக பதவி உயர்வு பெற்ற தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே வியாழக்கிழமை (05) மிருசுவில் தலைமையகத்திற்கு வந்தபோது வரவேற்றனர்.
பதவி உயர்வு பெற்று முதன் முறையாக மிருசுவில் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த போது இராணுவ மரபுகளுக்கு அமைவாக பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன.
புதிதாக பதவியுயர்வு பெற்ற படைப்பிரிவு தளபதி இத்தினத்தின் ஞாபகார்த்தமாக மரக்கன்றினை நாட்டி வைத்தார். பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்தில் கலந்துக்கொண்டார். கட்டளையின் கீழுள்ள அனைத்து பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர். latest jordans | Nike Air Max 270