07th November 2020 10:30:28 Hours
ஓய்வுபெறும் இயந்திர காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர அவர்களுக்கு இயந்திர காலாட் படையின் பிரியாவிடை செவ்வாய்க்கிழமை (03) தம்புள்ளை ஹல்மில்லேவவில் நடைபெற்றது.
ஓய்வுபெறும் படைத் தளபதியினை தாமரை தடாக கலையரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் சுஜித் பாலச்சந்திர, இயந்திர காலாட் படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக பிரியதர்ஷன, இயந்திர காலாட் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜனக பிரியதர்ஷன ஆகியோர் வரவேற்றனர்.
நுழைவாயிலில் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை உடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நினைவுதூபியில் இறந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மரக்கன்று நாட்டுதல், படையினருக்கான உரை, அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து என்பன இடம்பெற்றன. மாலை உத்தியோகபூர்வ இராபோசணம் இடம்பெற்றது இதன்போது அவரது சேவை பாராட்டப்பட்டதுடன் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
அடுத்த நாள் அவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணத்தை பதிவிட்டதுடன் இறதியாக அவருக்கு வீதி வரி அணிவகுப்பு மரியாதை ஊடாக எதிர்கால வாழ்க்கைக்கான வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைக்கப்பட்டார். Nike shoes | Air Jordan Release Dates 2020