Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2020 14:10:04 Hours

22 வது படைப்பிரிவு கொவிட் 19 தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டல்

கொவிட் 19 பரவலை தடுப்பது குறித்த சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் வியாழக்கிழமை (05) திருகோணமலை மாவட்டத்தின் பொது இடங்களில் நடாத்தப்பட்டன.

22 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிவின் அறிவுறுத்தலின் பேரிலும், 221, 222 மற்றும் 22 வது பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழும் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கொவிட் 19 க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் , அதன் மோசமான விளைவுகள் மற்றும் பொது மக்கள் ஆரோக்கியம் குறித்து ஏராளமான பொதுமக்கள் அறிவூட்டப்பட்டது.

6 வது இலங்கை கவசப் படை, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 22 வது விஜயபாகு காலாட்படை மற்றும் 2 (தொண்டர’) கஜபா படை ஆகியன அக்போபுர, காந்தளாய், தம்பலகாமம், வெருகல், சேருநுவர மற்றும் திருகோணமலை நகரத்தில் பொது இடங்களில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. Nike Sneakers Store | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf