06th November 2020 14:00:04 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க வியாழக்கிழமை (5) 59 வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் அதன் கட்டளையின் கீழுள்ள அமைப்புகளுக்கு விஜயம் செய்தார்.
பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் விஜயத்தின் போது 59 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா வரவேற்றார். பின்னர் 59 வது படைப்பிரிவு படையினரின் செயற்பாட்டு பரம்பல் தொடர்பாக விளக்கமளித்தார்.
59 வது படைப்பிரிவு விஜயத்தின் பின்னர் தளபதி 591, 592 மற்றும் 593வது பிரிகேட்களுக்கும் 19வது கெமுனு ஹேவா, 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 5 வது இலங்கை சிங்க படை, மற்றும் 24வது இலங்கை சிங்க படை ஆகியவற்றிக்கும் விஜயம் செய்தார். இதன் போது அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தியதுடன் படையினரின் தங்கும் விடுதி மற்றும் வீதித் தடை கடமைகளை குறித்து ஆய்வு செய்தார்.
பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தளபதியின் விஜயத்தின் போது பங்குபற்றிருந்தனர். bridge media | Sneaker & Lifestyle News