05th November 2020 17:15:48 Hours
வரலாற்று சிறப்புமிக்க காங்கேசன்துறை திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாரம்பரிய வருடாந்த பூஜையின் மத நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (3) மகா சங்கத்தினரின் (தேரர்கள்) பங்கேற்புடன் யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, 5 வது இலங்கை இராணுவ சேவைப் படை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர் பண்டிதரத்ன மற்றும் படையினரின் பங்குப்பற்றலில் நடைப்ப்பெற்றது.
இந்நிகழ்வானத் 67 ஆண்டுகள் நடைப்பெறாத நிலையில் இம்முறை வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி, பிரிகேடியர் வண்தித மஹிங்கந்தவின் மேற்பார்வையில் படையினரின் ஒத்துழைப்பில் நடைப்பெற்றது. குறித்த விகாரையின் புதிய சன்னதியில் பிரதிஸ்டை செய்வதற்கான புத்த விக்கிரகத்தின் ஊர்வலம் ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி தொடங்கியது.
யாழ்ப்பாணத்திற்கு விக்கிரக ஊர்வலம் வந்தடைந்ததும் யாழ் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டா புத்த விக்கிரகத்தை பெற்று திஸ்ஸ மகா விகாரை சன்னதியில் பிரதிஸ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் மகா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மூலிகை பூஜை சிறப்பு போதி பூஜை என்பனவற்றை நடாத்தினர். ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய மீகஹாஜதுரே சிரிவிமல தலைமை தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கு எட்டுப்பொதி வழங்கல் மற்றும் தானம் வழங்கல் என்னவற்றுடன் விழா நிறைவுபெற்றது. Nike Sneakers Store | Nike Off-White