06th November 2020 14:17:04 Hours
கஜபா படையின் பிரிகேடியர் மொகான் ரத்நாயக்க வியாழக்கிழமை (5) பனாகொடை விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமை ஏற்றுக்கொண்டார். புதிய பணிப்பாளர் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்பை குறிக்கும் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
புதிய பணிப்பாளர் பிரிகேடியர் மொகான் ரத்நாயக்க அவர்கள் பிரிகேடியர் லால் சந்திரசிரி இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதன் காரணமாக குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பணிப்பாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக பதவிநிலை அதிகாரிகள் மற்றும் பணிப்பகத்தின் படையினர் அங்கு கூடி இருந்தனர். பிரிகேடியர் மோகன் ரத்நாயக்க இந்த நியமனத்திற்கு முன்பு இராணுவ தலைமைகத்தின் போக்குவரத்து முகாமைத்துவ பணிப்பாளராக இருந்தார். Best Nike Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%