06th November 2020 13:47:04 Hours
வெளிகம மற்றும் கரந்தெனிய ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் 61வது படைப்பிரிவின் 613வது பிரிகேட் படையினர் அவ்விரண்டு வைத்தியசாலைகளையும் எதிர்காலத்தில் கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படின் அந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டன.
61வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் 613 வது பிரிகேட்டின் தளபதி கர்னல் உபுல் கொடித்துவக்கு அவர்களின் ஒருங்கிணைப்பில் கொவிட் 19 நோயளிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படின் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக வைத்தியசாலை விடுதிகள் கொவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு மையங்களாக மாற்றும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கம்புருபிட்டி மருத்துவமனையிலும் இதற்கு முன்னர் இதே போன்று மாற்றங்கள் செய்யப்பட்டன
613 வது பிரிகேட்டின் 3 வது (தொண்டர்) கெமுனு ஹேவா மற்றும் 14 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படைகளின் படையினர் இத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்றனர். Adidas shoes | Sneakers Nike Shoes