Header

Sri Lanka Army

Defender of the Nation

05th November 2020 16:00:48 Hours

14 வது படைபிரிவின் புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவகே வியாழக்கிழமை (5) கொழும்பு 2 இல் அமைந்துள்ள 14 வது படைபிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அதன் 9 வது தளபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

புதிய 14 வது படைபிரிவு தளபதியை படைப்பிரிவின் பதவிநிலை அதிகாரிகளினால் அன்புடன் வரவேற்கப்பட்டார். பின்னர் சிரேஸ்ட அதிகாரிகளின் முன்னிலையில் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமையேற்பு குறித்த உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இப்பதவிக்கு முன்னதாக மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவகே இராணுவ தலைமையக பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் 142, 143 மற்றும் 144 பிரிகேட்களின் தளபதிகள் மற்றும் 14 படைப்பிரிவு பதவிநிலை அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர்.

மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொலவிக்குப் பிறகு 14 படைப்பிரிவிக்கு மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவகே புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார். Authentic Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals