05th November 2020 12:31:03 Hours
இன்று (05) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணி நேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 443 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.
இன்று (05) காலை 6.00 மணி வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 8713 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்,1007 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள், மீதமான 6665 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். அதேவேளை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 412 பேரும் அவர்களுடன் தொடர்புடைய 2024 பேரும் முடையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 22 பயணிகள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 156 நபர்கள் இன்று (05) PCR சோதனைகளின் பின்னர் வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், கொக்கல ரிசோர்ட் தனிமைப்படுத்தல் மையம் 92, ஹொட்டல் ரன்வெளி தனிமைப்படுத்தல் மையம் 27, கல்கந்த தனிமைப்படுத்தல் மையம் 37 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று வரை மொத்தம் 63,439 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (05) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் 2,601 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 04 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10,655 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 557,458 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 277 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (05) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர். ஏனைய அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான கொத்தணியுடன் தொடர்புகளை பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. (முடிவு) Sports News | Nike