Header

Sri Lanka Army

Defender of the Nation

04th November 2020 15:00:54 Hours

23வது படைப்பிரிவின் புதிய தளபதி அவரின் கட்டளையின் கீழுள்ள பிரிகேட்களுக்கு விஜயம்

மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க 23 வது படைப்பிரிவின் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் 2020 ஒக்டோபர் மாதம் 31, நவம்பர் மாதம் 01 மற்றும் 02 ம் திகதிகளில் தனது கட்டளைக்கு கீழுள்ள பிரிகேட்களுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

சனிக்கிழமை (31) 231வது பிரிகேட்க்கு விஜயம் மேற்கொண்ட தளபதியினை பிரிகெட் தளபதி கேணல் பிரதீப் கமகே அவர்கள் வரவேற்றார். பின்னர் பிரிகேட் தளபதி மற்றும் அமைப்பின் கீழ் இயங்கும் படைகளின் கட்டளையதிகாரிகளினால் அச்சுறுத்தல் நிலைமையின் தன்மை மற்றும் வழக்கமான செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் படைப்பிரிவுத் தளபதி காத்தான்குடி கொவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலை, தாழங்குடா தனிமைப்படுத்தல் மையம் மற்றும் படைப்பிரிவின் தெற்கு எல்லையான பெரியக்கலாறு ஆகியவற்றை பார்வையிட்டார்.

அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை (1) தளபதி வாகரையில் உள்ள 233வது பிரிகேட்டிக்கு விஜயம் செய்தார். அங்கு அவருக்கு பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரஜித் எல்விடிகல அவர்களினால் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரிகேட் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகளினால் தங்களின் செயற்பாடுகள் குறித்த விளக்கக்காட்சி ஊடாக விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து திங்கள்கிழமை (2) தொப்பிகலை 232வது பிரிகேட்டிற்கு விஜயம் செய்த போது அங்கு அதன் தளபதி பிரிகேடியர் வசந்த லியனவடுகே அவர்களால் வரவேற்கப்பட்டது. பின்னர் பிரிகேட் மேற்கொண்டு வரும் செயல்பாட்டு மற்றும் நிர்வாகப் பணிகள் தொடர்பாக பிரிகேட் தளபதி விரிவான விளக்கத்தினை வழங்கினார். பின்னர் படைப்பிரிவு தளபதி தலைமையகத்தின் விரிவுரை மண்டபத்தில் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றினார்.

அவரது விஜயத்தின ஞாபகார்த்தமாக முகாம் வளாகங்களில் மரக்கன்றுகளை நாட்டியதோடு விருந்தினர் பதிவேட்டு புத்தகங்களிலும் தனது கருத்தினை பதிவிட்டார்.Nike air jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer