Header

Sri Lanka Army

Defender of the Nation

05th November 2020 08:31:03 Hours

யக்கல ரணவிரு அப்பரல்ஸ் தொழிற்சாலைக்கு புதிய தளபதி

யக்கல ரணவிரு அப்பரல்ஸ் தொழிற்சாலையின் 6 வது தளபதியாக பிரிகேடியர் அசாத் இசதீன் வியாழக்கிழமை (ஒக்டோபர் 29) கடமை ஏற்றார்.

தனது கடமை ஏற்பிற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக இராணுவ மரபுகளுக்கு இணங்க வண்ணமயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை படையினரால் வழங்கப்பட்டது.

அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருணாவிற்கு பிறகு புதிய தளபதியாக பிரிகேடியர் அசாத் இசதீன் நியமிக்கப்பட்டார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் அசாத் இசதீன், பாமங்கடையிலுள்ள தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் தலைமையகத்தில் பயிற்சி அத்தியட்சகராக பணியாற்றினார்.bridgemedia | NIKE