05th November 2020 09:31:03 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க மற்றும் 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவெல ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 64வது படைப்பிரிவு படையினர் கொவிட் 19 பரவலை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு பொது இடங்கள் மற்றும் அதன் சுற்று சூழலில் தொற்று நீக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர்.
641வது பிரிகேட் தளபதி கர்னல் ஜனக் ஜயவர்தனாவின் மேற்பார்வையில் ஒட்டுசுட்டான் மற்றும் கற்சிலைமடு பகுதிகளின் பொது இடங்கள் வெள்ளிக்கிழமை (30) படையினரால் தொற்று நீக்கப்பட்டது. அதேவேளை தண்டுவான், முத்துஐயன்கட்டுக்குளம் மற்றும் முத்துவினாயகபுரம் பகுதிகள் 643வது பிரிகேட் தளபதி கர்னல் டிரால் சில்வா அவர்களின் மேற்பார்வையில் சனிக்கிழமை (31) படையினரால் தொற்று நீக்கப்பட்டது.
641 வது பிரிகேட், 643 வது பிரிகேட், 14 வது சிங்க படை மற்றும் 13 வது இலங்கை தேசிய பாதுகாவல் படை அகியவற்றின் படையினர் அந்தந்த பகுதிகளின் பொது சுகாதார பரிசோதகர்களின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இத்தொற்று நீக்கும் செயற்பாட்டை மேற்கொண்டனர்.latest Nike release | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov