02nd November 2020 12:38:55 Hours
மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரன மத்திய பாதுகாப்புப் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் திங்களன்று (2) முறையே 12வது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளையின் கீழுள்ள அமைப்புகளுக்கு விஜயம் செய்தார்.
விஜயம் செய்த பாதுகாப்புப் படைகளின் தளபதியை 12வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டர அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன் தனது அதிகார பிரதேசத்தில் நிலைக்கொண்டுள்ள படைகளின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
அதன்பிறகு அவர் 122வது பிரிகேட்டிற்கும் விஜயம் செய்தார் அங்கு அவரை 122வது பிரிகேட்டின் தளபதி கர்னல் ஜனக பல்லேகும்புர மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.எம்.எல்.பி. சமரக்கோன் ஆகியோர் வரவேற்றனர். விஜயத்தின் போது பாதுகாப்பு படைகளின் தளபதி படையினர் விடுதி , வீதி தடை கடமைகள் மற்றும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் ஆய்வு செய்தார். இறுதியாக அவர் முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு முன்பு விருந்தினர் பதிவேட்டுப் புத்தகங்களில் பாராட்டுக்களை பதிவிட்டார். Best Nike Sneakers | Zapatillas de running Nike - Mujer