02nd November 2020 10:40:33 Hours
வியாழக்கிழமை (29) மினேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தின் 39 வது தளபதியாக மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய தளபதியை பதவிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் பயிற்சி நிலையத்தின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் கடமையேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் நிகழ்வின் நினைவாக நிலைய வளாகத்தில் மரக்கன்றும் நாட்டி வைத்தார்.
அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து ,அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை என்பன இடம்பெற்றன. பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன இராணுவ தலைமையகத்தில் ஆதன முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளராக பணியாற்றினார்.Adidas footwear | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ