Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2020 11:40:33 Hours

613 வது பிரிகேட்டிக்கு புதிய தளபதி

வியாழக்கிழமை (22) கம்புருபிட்டிவில் உள்ள 613 வது பிரிகேட்டின் 8 வது தளபதியாக மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கர்னல் உபுல் கொடிதுவக்கு பொறுப்பேற்றார்.

613 வது பிரிகேட்டின் புதிய தளபதியை பதவிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் மூன்றாவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கர்னல் கொடிதுவக்கு தனது கடமையேற்பு உத்தியோகபூர்வ ஆவணத்தில் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் கையொப்மிட்டார். பின்னர் நிகழ்வின் நினைவாக மரக்கன்று நாட்டி வைத்தார்.

அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து, அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை என்பன இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் பிரிகேட் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் கர்னல் உபுல் கொடிதுவக்கு இராணுவ தலைமையகத்தின் மனிதவள நிர்வாக பணிப்பகத்தின் கர்னல் நிர்வாகமாக பணியாற்றினார்.Running sneakers | Nike