02nd November 2020 12:40:33 Hours
கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்களன்று (02) மட்டக்களப்பகுதியில் உள்ள 231 வது பிரிகேட் தலைமையகத்தினால் பெருந்தொகையான பொதுமக்கள் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி திட்டமானது 231 வது பிரிகேட்டின் தளபதி கர்னல் பிரதீப் கமகேவின் வழிகாட்டுதலின் பேரில் 4வது கெமுனு ஹேவா படையினரால் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு பொலிஸார் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒத்தழைப்பு வழங்கினர்.
இது கொவிட் 19 க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஆரோக்கியம், தொடர்பு அபாயங்கள், தனிப்பட்ட சுகாதாரம் போன்றவற்றின் மோசமான விளைவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பிரதானமாக முகமூடிகளை அணிவது, சமூக இடைவெளி பேணல் மற்றும் கைகளை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு அறிவூட்டப்பட்டது. Running sports | Women's Nike Superrep