03rd November 2020 10:52:13 Hours
கொவிட்-19 தொற்றுநோய் பரவுவது தொடர்பாக வெவ்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில், கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவசர வைத்தியசாலையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் நோக்கில் அங்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு நடந்து கொண்டிருக்கும் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் பார்வையிட்டார்.
பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வந்த பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு 3 ஆவது கஜபா படையின் படையினரால் இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கோட்டுவேகொட அவர்கள் சார்பில் முல்லைத்தீவு பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் வரவேற்றார்.
அதன் பின்னர் , முல்லைத்தீவு பாதுகாப்பு கட்டளைத் தளபதி , முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் பியால் நாயக்காரவசம், படைப் பிரிவுத் தளபதிகள் மற்றும் பிரிகேட் படைப்பிரிவுத் தளபதிகள் ஆகியோருடன் தலைமையக மாநாட்டு மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது.
பின்னர், பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டுமானக் குழுவினருடன் பார்வையிட்டார் இணைந்து கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வைத்தியசாலை வளாகத்தின் கட்டுமானப் பணிகளை அனைத்து பார்வையிட்டார்.இந்த வைத்தியசாலையானது கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதனை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை குறித்த கட்டுமான பணிகள் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
பின்னர், இராணுவத் தளபதி நெலும்பியச கேட்போர்கூடத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் மத்தியில் உரையாற்றினார்.
கொவிட்-19 தொற்றுநோய் குறித்து கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி, அதிமேதகு ஜனாதிபதியவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நடத்துவதில் சவால்களை பொறுப்பெடுத்த பெருமிதம் இராணுவத்திற்கு உள்ளது பேரில் இந்த பணியின் சவாலை மேற்கொண்டது.
"பாதுகாப்புப் படையின் மிகவும் ஒழுக்கமான உறுப்பினர்களாக நம்மிடையே இந்த தொற்றுநோயைப் பரப்புவதற்கு எதிராக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுப்பது நமது கடமையாகும். அதனால்தான் இராணுவத்தால் நிலைமையை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் நிர்வகிக்க முடிந்தது. வைரஸ் குறித்த இந்த விழிப்புணர்வை நீங்கள் அனைவரும் தொடர வேண்டும் என்றும், ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன், ”என்று லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறினார்.
இராணுவத் தளபதியின் குறித்த விஜயத்தில் முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, படைப்பிரிவு படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து கொண்டனர். affiliate tracking url | Autres