31st October 2020 15:06:43 Hours
திங்கள்கிழமை (26) வல்லம்குளம் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 532 வது பிரிகேட்டின் 11 வது தளபதியாக கர்னல் சமன் சேனாரத்ன பொறுப்பேற்றார்.
532 வது பிரிகேட்டின் புதிய தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் 4 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கர்னல் சமன் சேனாரத்ன தனது கையொப்பத்தை சிரேஸ்ட அதிகாரிகளின் முன்னிலையில் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் வைத்தார். பின்னர் நிகழ்வின் ஞபகார்த்தமாக மரக்கன்றினை நாட்டி வைத்தார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் கர்னல் சமன் சேனாரத்ன 641 வது பிரிகேட்டின் தளபதியாக பணியாற்றினார்.
அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து மற்றும் அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரையாற்றல் என்பன இடம்பெற்றன. கட்டளை அதிகாரிகள், பிரிகேட் அதிகாரிகள் மற்றும் படையினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.latest Nike Sneakers | Nike