02nd November 2020 07:21:33 Hours
வியாழக்கிழமை (29) ஹொரானாவில் உள்ள தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 582 வது பிரிகேட்டின் 10 வது தளபதியாக கர்னல் கவிந்த பாலசூரிய கடமை ஏற்றுக்கொண்டார்.
582 வது பிரிகேட்டின் புதிய தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படையின் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் மத அனுஸ்டனங்களுக்கு மத்தியில் கர்னல் கவிந்த பாலசூரிய தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் கையொப்பத்தை உத்தியோகபூர்வ ஆவணத்தில் வைத்தார். பின்னர் நிகழ்வின் ஞபகார்த்தமாக மரக்கன்றினை நாட்டி வைத்தார்.
தொடர்ந்து அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து மற்றும் அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை என்பன இடம்பெற்றன. நிகழ்வில் கட்டளை அதிகாரிகள், பிரிகேட் அதிகாரிகள் மற்றும் படையினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் கர்னல் கவிந்த பாலசூரிய பாதுகாப்புப் பிரதானி காரியாலயத்தின் கர்னல் பொதுப் பணியாக பணியாற்றினார்.short url link | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff