Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2020 19:22:20 Hours

வன்னிப் பாதுகாப்பு கட்டளைத் தளபதி 54 வது படைப் பிரிவிற்கான முதல் விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் தான் பதவியேற்ற பின்னர், 54 வது படைப் பிரிவு மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள படையணிகளுக்கான தனது உத்தியோகபூர்வான விஜயத்தினை புதன்கிழமை (28) மேற்கொண்டார்.

விஜயத்தினை மேற்கொண்ட வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியவர்களுக்கு 54 வது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் முகாம் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். 54வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார அவர்கள் 54 பிரிவில் பணியாற்றும் பிராந்தியத்தில் உள்ள படையினரின் செயல்பாடு குறித்து வருகை தந்த தளபதியிடம் விளக்கினார்.

கல்லாருவில் உள்ள 542 படைப்பிரிவுக்கு அவரின் விஜயத்தின் போது ‘துரு மிதுரு-நவ ரத்தக்’ திட்டத்திற்கு ஒப்பாக மரம் நடும் திட்டம் ஆரமபிக்கப்பட்டது. மேலும்,விஜயத்தினை மேற்கொண்ட வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் பங்கேற்புடன் கல்லாரு பகுதியில் உள்ள ஏழை சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

தனது சுற்றுப்பயணத்தின் போது, அவர் 8 வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவு, 10 வது (தொண்) கெமுனு ஹேவா மற்றும் 15 வது(தொண்) கெமுனு ஹேவா படை முகாம்களையும் பார்வையிட்டதோடு, அவர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

54 வது படைப் பிரிவின் படைத் தளபதி, 541, 542, 543 மற்றும் 544 பிரிகேட் படைப்பிரிவுகளின் தளபதிகள், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் அவரின் விஜயத்தின் போது அவருடன் இணைந்திருந்தனர்.bridgemedia | Nike for Men