Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2020 13:25:33 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி படைப் பிரிவுகளுக்கான விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது தளபதி கட்டளைத் தளபதியாக அன்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் 56 பாதுகாப்பு படைப் பிரிவு மற்றும் அதன் கீழ் இயங்கும் பிரிகேட் படையணிகள் மற்றும் பட்டாலியன்களுக்கு சனிக்கிழமையன்று (31) தனது விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு வருகையினை மேற்கொண்ட தளபதியவர்களுக்கு படைத் தலைமையக வளாகத்தில் நுழைவாயிற் மரியாதை வழங்கப்பட்டதுடன், 56 காலாட்படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரு அவர்கள் தளபதியவர்களுக்கு படையினரின் பங்கு மற்றும் பணிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கத்தனை தளபதியிடம் வழங்கினார்.

தனது விஜயத்தின் போது, 562 வது பிரிகேட் தலைமையகம், பூந்தோட்டத்தில் உள்ள புனர்வாழ்வு மையம், பூந்தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், பம்பைமுடு, பெரியகாடு, 15வது(தொண்) இலங்கை சிங்க படையணி மற்றும் 17 வது(தொண்) இலங்கை சிங்க படையணி பட்டாலியன்களை சென்று பார்வையிட்டார்.

56 வது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி 561, 562 மற்றும் 543 பிரிகேட் படைப்பிரிவுகளின் தளபதிகள், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 56 வது பாதுகாப்பு படைப் பிரிவின் பட்டாலியன் தளபதிகள் குறித்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.Running sneakers | nike