02nd November 2020 12:36:55 Hours
இன்று (03) காலை வரையான அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 275 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.
மேலும் கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாத்துகம, மாவனெல்லை, புலோத்கொஹுபிட்டிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களும் கலிகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசமும் குருணாகல் மாவட்டத்தின் கிரிவுல்ல பொலிஸ் பிரிவும் நேற்று (02) மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (03) காலை வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 7857 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 6816 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (03) காலை டோகா கட்டாரில் QR 668 விமானம் ஊடாக 18 பயணிகளும் அபுதாபியில் இருந்து EY 264 விமானம் ஊடாக 11 பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 15 நபர்கள் இன்று (03) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், திக்வெல்ல ரிசோர்ட் தனிமைப்படுத்தல் மையம் 05, ஜெட்வின் புளூ தனிமைப்படுத்தல் மையம் 03, ஆயுரவேத வைத்தியசாலை தனிமைப்படுத்தல் மையம் 07 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று காலை வரை மொத்தம் 62917 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (03) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 35 தனிமைப்படுத்தல் மையங்களில் 1082 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 02 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 11889 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 536337 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 344 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (03) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் ஏனைய அனைவரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. Nike footwear | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov