02nd November 2020 08:21:11 Hours
வன்னியில் உள்ள படையினரால் வைரசுக்கு எதிராக ஆற்றிய பங்கை பாராட்டிய ஒரு பிரபலமான நன்கொடையாளர் திரு சரத் களுஆராச்சி அவர்கள் வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களிடம் வியாழக்கிழமை 29 ஆ திகதி மிரிசவெத்திய ரஜமகா விகாரையில்வைத்து பத்து பெட்டி டிஜிட்டல் வெப்பமானிகளை நன்கொடையாக வழங்கினார்.
குறித்த நன்கொடையானது மிரிசவெத்திய ரஜமகா விகாரையின் தலைமை தேரர் வென் ஈதல்வெட்டுநுவெவ ஞானதிலக தேரர் மூலம் வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியிடம் வழங்கப்பட்டது.
அந்த டிஜிட்டல் வெப்பமானிகள் கொவிட்-19 வைரஸ் பரவுவதற்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்துவதற்காக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளையின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளிலும் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வின் போது (வட மத்திய), முன்னரங்கு பாதுகாப்பு பகுதி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால், 21 வது படைப் பிரிவின் படைத தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Best Authentic Sneakers | Sneaker & Lifestyle News