30th October 2020 07:30:51 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க மற்றும் 68 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலில் 68 வது படைப் பிரிவின் படையினர் கொவிட்-19 அச்சுறுத்தலின் அபாயங்களைத் தணிக்கும் பொருட்டு பொதுச் சந்தை மற்றும் மீன் சந்தையில் கிருமிநாசினி தொற்று நீக்கப்பணிகள வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி மேற்கொண்டனர்.
கொவிட்-19 வைரஸ் மற்றும் பிற தொற்று கிருமிகளின் அச்சுறுத்தலிலிருந்து பகுதிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் உதயர்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது இடங்கள் தொற்று நீக்கப்பட்டன.
681 வது பிரிகேட் படை, 682 வது பிரிகேட் படை , 7வது கெமுனு ஹேவா, 18 வது விஜயபாகு காலாட் படை, 6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை, 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை மற்றும் 4 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி உள்ளிட்ட படையணிகளின் படையினர் குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்போடு தொற்று நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.Sports Shoes | Air Jordan